இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் |
மணிரத்தனம் இயக்கிய பம்பாய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இந்தி நடிகை மனீஷா கொய்ராலா. இந்தியில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மனீஷா, தமிழில் இந்தியன், ஆளவந்தான், பாபா, மும்பை எக்ஸ்பிரஸ், படங்களில் மட்டுமே ஹீரோயினாக நடித்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த 2011ம் ஆண்டு மாப்பிள்ளை படத்தில் நடித்தார்.
அதன் பிறகு புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட மனீஷா, சினிமாவை விட்டு விலகி இருந்தார். தற்போது புற்றுநோயிலிருந்து மீண்டு தன் சினிமா கேரியரை மீண்டும் துவக்கி இருக்கிறார். இந்தி படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்ட மனீஷா, தமிழில் தயாராகும் ஒரு மெல்லிய கோடு படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். குப்பி, வனயுத்தம் படங்களை இயக்கிய ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கும் இந்தப் படத்தில் அர்ஜூன், ஷாம், ஆஷாபட் ஆகியோர் நடிக்கிறார்கள். இளையராஜா இசை அமைக்கிறார். சேது ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.
"பல மரணங்களுக்கு தீர்வே இல்லாமல், கண்டுபிடிக்க முடியாமல் போகிறது. அப்படிப்பட்ட மரணங்களை தோண்டி எடுத்து காரணத்தை கண்டுபிடிக்கும் ஒரு நிபுணரின் கதை இது. நாட்டில் இன்னும் விடுவிக்கப்படாத பல புதிரான கொலைகள் பற்றி ஆராய்கிறது படம். இதில் மனீஷா கொய்ராலா முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். இங்கு நிறைய நடிகைகள் இருக்கும்போது அவரை அழைத்து வந்து நடிக்க வைப்பதற்கான பலமான காரணம் படத்தில் இருக்கிறது" என்றார் இயக்குனர் ரமேஷ்.