'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கதைக்கு தேவைப்படுகிறதென்றால் நிச்சயம் மோகன்லாலின் கை தமிழ்நாட்டில் உள்ள நடிகர்களை நோக்கி சுட்டிக்காட்ட தயங்குவதில்லை.. தலைவாசல் விஜய்யும் சமுத்திரக்கனியும் 'ஷிகார்' என்கிற படத்தில் இணைந்து அவருடன் நடித்ததும் அப்படித்தான். மிக முக்கியமாக காமெடி நடிகர்களுக்கு அவரது ஆதரவு அதிகம் உண்டு. மலையாளத்தில் சத்யன் அந்திக்காடு இயக்கிய 'சிநேக வீடு' படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடித்த நம்ம ஊர் அப்புக்குட்டிக்கு அந்த பிரமிப்பில் இருந்து மீளவே ரொம்ப நாள் பிடித்தது.
அந்தப்படத்தில் மோகன்லாலுக்கு சொந்தமான தோட்டத்தை கவனித்துக்கொள்ளும் வேலைக்காரனாக சுத்த தமிழிலேயே பேசி நடித்திருந்தார் அப்புக்குட்டி. இப்போது மோகன்லாலின் நேசப்பார்வை காமெடி நடிகர் கஞ்சா கருப்புவின் பக்கம் பாய, ரஞ்சித் இயக்கத்தில் மோகன்லால் நடித்துவரும் 'லோஹம்' படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் கஞ்சா கருப்பு.