மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
கமல்ஹாசனுடன் மன்மதன் அம்பு படத்தில் நடித்து முடித்திருக்கும் நடிகை த்ரிஷாவைத் தேடி விலைமாது கேரக்டர் வந்திருக்கிறது. ரூ.1 கோடிக்கும் அதிக சம்பளம் தரத் தயார் என்று படத்தயாரிப்பு நிறுவனம் கூறியும், அம்மணி வேண்டவே வேண்டாம் என்று அலறி அடித்துக் கொண்டு ஓடி விட்டாராம். தெலுங்கு திரையுலகை வலம் வந்து கொண்டிருக்கும் இந்த செய்தி குறித்து த்ரிஷா அளித்துள்ள பேட்டியில், "விபச்சாரி கேரக்டர் என்பது மிகவும் சவால் நிறைந்தது. எளிதாக அதில் நடிக்க முடியாது. எனவேதான் அந்த வேடத்தில் நடிக்க நான் மறுத்து விட்டேன். விபச்சாரியாக நடிக்கும் அளவு எனக்கு இன்னும் பக்குவம் வரவில்லை. அந்த கேரக்டரில் நடிக்கும்போது இதற்கு முன் எந்த நடிகையும் அதுமாதிரி நடிக்கவில்லை என்று பெயர் எடுக்க வேண்டும். வேறு நடிகைகளும் இந்த நடிப்பை பார்த்து பயப்பட வேண்டும். அப்படியொரு துணிச்சல் வரும்போது நடிப்பேன், என்று கூறியுள்ளார்.
கிசுகிசுக்கள் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ள த்ரிஷா, நடிகர், நடிகைகள் பற்றி கிசுகிசுக்கள் வருவது தவறல்ல. கிசுகிசுக்கள் வளர்ச்சிக்கு உதவுகின்றன. எனவே அவை பற்றி வருத்தப்படக் கூடாது. ஆனால் சில நடிகைகள் தங்களை பற்றிய கிசுகிசுக்களை தாங்களே பரப்பி விளம்பரம் தேடுகின்றனர். அதுதான் தவறு. நான் அப்படியல்ல" என்று கூறியிருக்கிறார்.