'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஜோதிகா 8 ஆண்டுகள் கழித்து ரீ-என்ட்ரியாகியுள்ள படம் 36 வயதினிலே. இப்படத்தின் இசை வௌியீட்டு விழா, சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்தது. விழாவில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய வெங்கட் பிரபு, ஒரு கணவன், தனது மனைவியை மகிழ்ச்சியாக வைத்து கொள்வது சற்று சிரமமானது தான், ஆனால் சூர்யா, ஜோதிகாவை மிகவும் சந்தோஷமாக வைத்துள்ளார். அந்தவகையில் அவர் பெஸ்ட். மீண்டும் சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து நடிக்க வேண்டும். இதை ரசிகர்கள் சார்பாக நான் கேட்டு கொள்கிறேன் என்றார்.
இயக்குநர் பாலா பேசும்போது, இந்த விழாவிற்கு நான் சூர்யாவிற்காக வரவில்லை, ஜோதிகாவுக்காகத்தான் வந்தேன். ஏனென்றால் ஜோதிகாவின் தீவிர ரசிகன் நான் என்று கூறினார்.