Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திருமணம் குறித்து ஏப்ரல் ஃபூல் செய்தி பரப்பியவர்களுக்கு காவ்யா மாதவன் பதிலடி..!

06 ஏப், 2015 - 15:22 IST
எழுத்தின் அளவு:
Kavya-Madhavan-clarifies-April-fool-news

மலையாள முன்னணி நடிகையான காவ்யா மாதவன், தான் பிசியாக இருந்த சமயத்திலேயே திருமணம் செய்துகொண்டவர். தற்போது தனது கணவரைவிட்டு பிரிந்தபின் மீண்டும் மலையாள சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். ஆனால் இவர் அடுத்து திருமணம் செய்துகொள்ளப்போவது யாரை என்று சமூக வலைதளத்தில் பலர் பலவிதமாக டார்ச்சர் பண்ணி செய்தி வெளியிட்டு வருகிறார்கள். குறிப்பாக திலீப் தனது மனைவி மஞ்சு வாரியரை விவாகரத்து செய்ததற்கு கூட காவ்யா மாதவன் தான் காரணம் எனவும் சில செய்திகள் பரவின.


இதற்கு அடுத்தபடியாக ஏப்ரல் ஃபூல் பண்ணுகிறேன் என சில விஷமிகள், காவ்யா மாதவன் திலீப்பை திருமணம் செய்துகொண்டதாக செய்தி வெளியிட்டுவிட்டு கடைசி வரியில் இந்த திருமணம் ஏப்ரல்-16ல் நடந்தது என குறிப்பிடப்படிருந்தார்கள். ஆனால் இன்னும் ஏப்ரல்-16 வருவதற்குத்தான் பத்து நாட்கள் இருக்கின்றனவே..? அப்புறம் எப்படி திருமணம் நடந்திருக்கும்..? ஆனால் அவசரத்தில் அதையெல்லாம் கவனித்து படிக்காதவர்கள், இதை உண்மை என்றே நம்பிவிட்டார்களாம்.


இவர்களின் இந்த கீழ்த்தரமான செயல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, “அய்யா.. சமூக வலைதளங்களில் வதந்திக்கென கம்பெனி வைத்து தொழில் நடத்தும் கணவான்களே.. தயவு செய்து என்னைப்பற்றிய தகவல்கலை ரசிகர்களுக்கு அப்டேட் பண்ணும் சுதந்திரத்தை தயவுசெய்து என்னிடமே கொடுத்து விடுங்கள்..: என அவரவர் வேலையை அவரவர் பார்க்கும்படி கூறியுள்ளார் காவ்யா மாதவன். நடிகர் திலீப்பும் கூட இந்த வதந்தியால் ரொம்பவே தொந்தரவுக்கு ஆளாகியுள்ளாராம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in