‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் முதன் முறையாக விஜய் தொலைக்காட்சியில் தமிழில் ஒளிபரப்பானது. இது மிகுந்த வரவேற்பை பெற்றது. விஜய் தொலைக்காட்சியின் டிஆர்பி ரேட்டிங்கையும் எகிற வைத்தது.
தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிகளும் தமிழ் வர்ணணையோடு ஒளிபரப்பாக இருக்கிறது. சோனி குரூப்பிலிருந்து வரும் சோனி கிக்ஸ் தொலைக்காட்சிதான் ஒளிபரப்புகிறது. தமிழ் தவிர ஆங்கிலம், பெங்காலி, தெலுங்கு மொழிகளிலும் ஒளிபரப்புகிறது. இதனை ஐபிஎல் போட்டிகளின் ஒளிபரப்பு உரிமம் பெற்றுள்ள மல்டி ஸ்கிரீன் மீடியா நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த நிறுவனம் கடந்த ஆண்டு ஐபில் போட்டி ஒளிபரப்பின் மூலம் 800 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியது. இந்த ஆண்டு போட்டிகளின் மூலம் 950 கோடி வருமானம் ஈட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது 10 விளம்பரதாரர்கள் உள்ளனர். வருகிற போட்டியின் மூலம் மேலும் 3 விளம்பரதாரர்கள் இணைகிறார்கள். விளம்பர கட்டணத்தையும் 15 சதவிகிதம் உயர்த்தி உள்ளனர். 10 விநாடி விளம்பர கட்டணம் 5 லட்சம் ரூபாய் என்கிறார்கள்.