ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் ஷாம் தற்போது குப்பி, வனயுத்தம் படங்களை இயக்கிய ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கும் ஒரு மெல்லியகோடு படத்தில் அர்ஜுனுடன் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் சென்னையில் நடந்து வருகிறது. இந்த நிலையில், தனது 37வது பிறந்த நாளை ஷாம் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடினார். அவருக்கு அர்ஜூன் கேக் ஊட்டி பிறந்த நாள் வாழ்த்து சொன்னார்.
"சினிமாவுக்கு வந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. 50 படங்களில் நடித்து விட்டேன். நடிகனுக்கு வயது என்பது ஆயுளின் ஒரு ஆண்டு கூடுகிறது அவ்வளவுதான். சினிமாவில் இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. விரைவில் வெளிவர இருக்கும் புறம்போக்கு படமும், ஒரு மெல்லிய கோடு படமும் என் கேரியரில் முக்கியமாக இருக்கும்" என்கிறார் ஷாம்.