மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! |
ஜோதிகா, நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடித்து உருவாகியுள்ள 36 வயதினிலே படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு, ரசிகர்களாகிய உங்களை வரவேற்பதாக, நடிகர் சூர்யா கூறியுள்ளார். இதுதொடர்பாக, மீடியாக்களுக்கு ஒரு நிமிடகால அளவிற்கு ஓடும் ஆடியோவை, சூர்யா வெளியிட்டுள்ளார். அதில் சூர்யா கூறியுள்ளதாவது, வணக்கம் 8 ஆண்டுகளுக்கு பிறகு ஜோதிகா, அதே ஜோ அப்படித்தான் சொல்லணும். மீண்டும் வெள்ளித்திரைக்கு வர்றாங்க. என்னுடைய 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பான 36 வயதினிலே பாடல் வெளியீட்டு விழா, வர்ற ஏப்ரல் 6ம் தேதி, திங்கட்கிழமை காலை 10 மணிக்கு தனியார் நட்சத்திர ஹோட்டல்ல பிளான் பண்ணிருக்கோம். கண்டிப்பாக வாங்க...உங்களுக்காக காத்துக்கிட்டு இருக்கோம்......என்று அந்த ஆடியோவில் சூர்யா பேசியுள்ளார்.