'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான ராஜீவ் மேனன் கடந்த பத்து ஆண்டுகளாக மிண்ட்ஸ்கிரீன் பிலிம் இன்ஸ்ட்டியூட் என்ற பெயரில் சினிமா பயிற்சி கல்லூரி நடத்தி வருகிறார். இதில் அவர் மாணவர்களுக்கு ஒளிப்பதிவின் நுணுக்கங்களை கற்று கொடுத்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த இன்ஸ்டிடியூட்டில் திரைக்கதை அமைக்க கற்றுத் தரும் ஸ்கிரீன்ப்ளே ரைட்டிங் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டது. இதுதவிர அவ்வப்போது நடிப்பு பயிற்சி பட்டறைகளும் நடத்துப்பட்டு வந்தது. இப்போது 6 மாத நடிப்பு பயிற்சி வகுப்புகளையும் தொடங்கி இருக்கிறார். வருகிற மே மாதம் முதல் வகுப்புகள் தொடங்குகிறது.