'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விஷ்ணு, மியா ஜார்ஜ், கருணாகரன், நடித்து வரும் படம் இன்று நேற்று நாளை. ஆர்.ரவிகுமார் என்ற புதுமுகம் இயக்குகிறார், பீட்சா, சூது கவ்வும், அட்டகத்தி, தெகிடி படங்களை தயாரித்த திருக்குமரன் எண்டர்டெயின்ட் மெண்ட் சார்பில் சி.வி.குமார் தயாரித்துள்ளார்.
இந்தப் படம் டைம் மிஷினில் ஏறி எதிர்காலத்திற்கும், இறந்தகாலத்திற்கும் பயணிக்கும் பேண்டசியான கதை. இறந்த காலத்துக்குச் செல்லும் விஷ்ணு காந்தியை சந்திக்கிற மாதிரியான கதை. எதிர்காலத்துக்கு செல்லும் அவர் அங்கு நவீன விஞ்ஞானிகளை சந்திக்கிறார். காமெடி கலந்த ஜாலியான படம். நண்பர்கள் கேட்டால் உடனே கெஸ்ட் ரோலில் நடித்துக் கொடுத்து விடும் ஆர்யா, இந்தப் படத்திலும் விஷ்ணுவுக்காக கெஸ்ட் ரோலில் நடித்துக் கொடுத்திருக்கிறார். எதிர்காலத்தில் வரும் விஞ்ஞானியாக அவர் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட படத்தின் பர்ஸ்ட் லுக் டிரைலரில் ஆர்யாவின் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.