அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் |
ரோஷன் ஆன்ட்ரூஸ் இயக்கி மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியடைந்தஹவ் ஓல்ட் ஆர் யூ படத்தின் ரீ-மேக்கான 36 வயதினிலே படத்தில் நீண்டஇடைவேளைக்கு பிறகு ஜோதிகா நடித்துள்ளார். 36 வயதினிலே படத்தின் ஆடியோவை ஏப்ரல் 1-ஆம் தேதி அன்று வெளியிட இருப்பதாக முதலில் தகவல் வெளியானது. இதை சூர்யா தரப்பினரும் உறுதி செய்திருந்தனர். பின்னர் இந்த திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டது.
ஏப்ரல் 1-ஆம் தேதி அன்று 36 வயதினிலே படத்தின் ஒரு பாடலை மட்டும் அதாவது ஜோதிகாவுக்கு பில்ட்அப் கொடுப்பதுபோல் உருவாக்கப்பட்டுள்ள ராசாத்தி என்ற பாடலலை மட்டும்.. வீடியோ வடிவில் வெளியிடுவது என்றும், சில நாட்கள் கழித்து அதாவது ஏப்ரல் 5-ஆம் தேதி அன்று 36 வயதினிலே படத்தின் மொத்த பாடல்களையும் வெளியிடவும் திட்டமிட்டிருந்தனர்.!
கொம்பன் படத்துக்கு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக 36 வயதினிலே படத்தின் மொத்த திட்டமும் முடங்கிப்போனது. சிங்கிள் ட்ராக்கும் வெளியிடப்படவில்லை. ஆடியோ ரிலீஸ் ஃபங்ஷனும் நடக்கவில்லை. கொம்பன் பிரச்சனைகள் ஓய்ந்து படமும் ரிலீஸ் ஆகி தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. எனவே 36 வயதினிலே படத்தின் இசைவெளியீட்டை ஏப்ரல் 6 ஆம் தேதி நடத்த உள்ளனர். சென்னையில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் 36 வயதினிலே இசைவெளியீடு நடைபெற உள்ளது.