‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பாலிவுட்டின் பிரபல நடிகர் சன்னி தியோல். 90களில் முன்னணி ஹீரோவாக இருந்த சன்னி தியோல், தற்போது தனது மகன் கரண் தியோலையும் சினிமாவில் களமிறக்கி விட இருக்கிறார். இதற்காக உரிய இயக்குநரை தேடி வருகிறார் சன்னி தியோல். இயக்குநர் அனில் சர்மா, கரண் தியோலை இயக்க இருப்பதாக செய்திகள் வந்தன. ஆனால் அதன்பிறகு அதுப்பற்றிய எந்த பேச்சும் எழவில்லை. இந்நிலையில் இயக்குநர்கள் ராக்கேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா மற்றும் விகாஸ் பாலை ஆகியோரை நாடியிருக்கிறார் சன்னி.
தற்போது ராகேஷ், மிர்சியா படத்தின் ஷூட்டிங்கிலும், விகாஸ், அணில் கபூரின் மகன் ஹர்ஷவர்தன் நடிக்கும் ஷாந்தர் படத்தின் போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் வேலைகளிலும் பிஸியாக இருக்கிறார்கள். அதனால் இவர்கள் இருவரும் இப்போது கரணை இயக்க வாய்ப்பில்லை. இதனால் தொடர்ந்து தனது மகனுக்கு ஏற்ற இயக்குநரை தேடி வருகிறார். தற்போது கரண் தியோல் நடிப்பு பட்டறையில் சேர்ந்து நடிப்பு பயிற்சி எடுத்து வருகிறார்.