சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
சைவம் படத்திற்கு பிறகு ஏ.எல்.விஜய் இயக்கும் படம் இது என்ன மாயம். படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து தற்போது எடிட்டிங், டப்பிங், மிக்சிங், பின்னணி இசை கோர்ப்பு பணிகள் நடந்து வருகிறது. நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். நா.முத்துகுமார் பாடல்களை எழுதியுள்ளார்.
வாழ்க்கையில் திசை மாறிப்போன முன்னாள் காதலர்கள் மீண்டும் சந்தித்து கொண்டு ஒரே இடத்தில் வாழும் சூழ்நிலை உண்டானால் அது எப்படி இருக்கும் என்கிற கதை. கேரளாவில் பசுமை நிறைந்த பகுதிகளில் காதலர்களின் முந்தைய காதலையும், சென்னையில் இன்றைய வாழ்க்கையும் படமாக்கி இருக்கிறார் விஜய்.
ஆக்ஷன் பக்கம் திரும்பி சென்று கொண்டிருக்கும் விக்ரம் பிரபு நடித்திருக்கும் லவ் செண்டிமென்ட் படம். தற்போது மூன்று படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேசின் முதல் படம். இருவருக்கும் லவ் கெமிஸ்ட்ரி சூப்பராக வந்திருப்பதாக பட வட்டாரங்கள் தெரிவிக்கிறது. விஜய்யின் குருவான ப்ரியதர்ஷனும், மனைவி அமலாபாலும் சேர்ந்து தேர்வு செய்தவர்தான் கீர்த்தி சுரேஷ். சைவம் விருதுகளால் நிறைந்திருக்கும் சூழ்நிலையில் விஜய் என்ன மாயம் செய்திருக்கிறார் என்பது படம் வெளிவந்ததும் தெரிந்து விடும்.