Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மகன்களை ஹீரோவாக்கிய வீரத்தாய்

02 ஏப், 2015 - 12:43 IST
எழுத்தின் அளவு:
Mother-makes-her-sons-as-hero

எல்லா அம்மாக்களுக்குமே தங்கள் மகன்கள் ஹீரோக்களாகத்தான் தெரிவார்கள். ஆனால் ஒரு அம்மா தன் மகன்களை ஹீரோவாக உருவாக்கி இருக்கிறார். அந்த அம்மா சண்டை இயக்குனர் ஸ்டண்ட் சிவாவின் மனைவி லேனி ஹூ. ஹீரோக்களாகி இருப்பவர்கள் அவரது மகன்கள் கெவின், ஸ்டீபன்.


கராத்தேகாரன் என்ற படத்தில்தான் கெவினும், ஸ்டீபனும் ஹீரோக்களாக அறிமுகமாகிறார்கள். இவர்களின் அம்மா லேனி ஹூ மகன்களுக்காக கதை, திரைக்கதை எழுதி தானே படத்தை தயாரிப்பதோடு. ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவும் செய்கிறார். படத்தை இயக்குகிறவர் கணவர் ஸ்டணட் சிவா.


இதுபற்றி லேனி ஹூ கூறியதாவது: எங்க தாத்தா பச்சை தமிழர். நான் கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கியிருக்கிறேன். என் கணவர் ஸ்ட்ண்ட் இயக்குனராக இருக்கிறார். இந்த சண்டை வாழ்க்கை நம்மோடு போகட்டும் மகன்களை பெரிய படிப்பு படிக்க வைக்கத்தான் ஆசைப் பட்டோம். ஆனால் அவர்கள் ரத்த்திலும் சண்டை கலைதான் இருக்கிறது என்பதை கண்டுபிடித்தோம். அவர்கள் திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில் ஒரு படம் தயாரிக்க முடிவு செய்தோம். அப்போது ஜாக்கிசானின் கராத்தே கிட் படம் வந்து வெற்றி பெற்றதால் அதை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொண்டு அப்படி ஒரு படத்துக்கு மகன்களை தயார் செய்தேன்.


நானே அவர்களுக்கு பயிற்சி கொடுத்தேன். 3 வருட பயிற்சிக்கு பிறகு இப்போது நடிக்கிறார்கள்.


வீரமான சிறுவர்கள், பெண்களின் சாகசத்தை ஹாலிவுட் படங்களில்தான் பார்க்கிறோம். அப்படி ஒரு படத்தை நம்மாலும் தர முடியும் என்பதை நிரூபிப்போம். மகன்களுக்கு பயிற்சி அளித்த நான்தான் படத்திலும் அவர்களுக்கு பயிற்சிளிக்கும் கோச்சராகவும் நடிக்கிறேன். என்றார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in