Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆறு ஆண்டுகளை நிறைவு செய்யும் 'அயன்'

02 ஏப், 2015 - 12:13 IST
எழுத்தின் அளவு:
Ayan-completed-6-years

தமிழ்த் திரைப்பட உலகில் சூர்யாவை ஒரு முழுமையான கமர்ஷியல் ஹீரோவாக வசூல் ரீதியாகவும் அங்கீகரித்த படம் 'அயன்'. 'நேருக்கு நேர்' படத்தில் அறிமுகமான சூர்யாவுக்கு பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த 'நந்தா' படத்தில் நடித்த பிறகுதான் திரையுலகில் ஒரு திருப்பு முனை ஏற்பட்டது. அதன் பிறகு வெளிவந்த 'காக்க காக்க' படம் சூப்பர் ஹிட்டாக ஓடினாலும், அந்தப் படத்தில் சூர்யாவை அப்படி மாற்றி நடிக்க வைத்த இயக்குனர் கௌதம் மேனனுக்குத்தான் பெயர் கிடைத்தது. அடுத்து 'கஜினி' படத்தில் நடித்த போதும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுக்குத்தான் அதிகமான பெயர் கிடைத்தது. கூடவேதான் அந்த இரண்டு படங்களிலும் சூர்யாவின் நடிப்பைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்கள்.


ஆனால், சூர்யா தன்னுடைய தனித் திறமையால் இயக்குனரை விட தன்னை மட்டுமே முன்னிறுத்திப் பேச வைத்த படமாக கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்த 'அயன்' படம் அமைந்தது. இந்தப் படத்திற்குப் பின்னர்தான் சூர்யாவை தனித்து செயல்படக் கூடிய ஒரு முழுமையான கமர்ஷியல் ஹீரோவாக திரையுலகமும், ரசிகர்களும் அங்கீகாரம் செய்தார்கள். அதன் பின் அவர் நடித்த “ஆதவன், சிங்கம், 7ம் அறிவு, மாற்றான், சிங்கம் 2” ஆகீய படங்களில் சூர்யாவே முதன்மையாகப் பேசப்பட்டார்.


அப்படி சூர்யாவுக்கு ஒரு திருப்பு முனையைக் கொடுத்த 'அயன்' திரைப்படம் ஏப்ரல் 3ம் தேதி, 2009ம் ஆண்டு வெளியானது. இன்றுடன் அந்தப் படம் ஆறு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இது குறித்து, சூர்யா படத்தின் தயாரிப்பாளர்களான ஏவிஎம் நிறுவனத்திற்கும், இயக்குனர் கே.வி.ஆனந்திற்கும், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், எழுத்தாளர்கள் சுபா மற்றும் 'அயன்' படக்குழுவினர், ரசிகர்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துள்ளார். சூர்யாவின் திரையுலக வாழ்க்கையில் 'அயன்' படம் ஒரு முக்கியமான மைல்கல்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in