தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தெலுங்கு திரையின் முன்னணி நடிகரான நாகார்ஜூனாவின் மகனும் வளர்ந்து வரும் நடிகருமான நாகசைதன்யா டுசேய் (Dochay) என்ற படத்தின் படப்பிடிப்பில் மிகவும் மும்முரமாக பணியாற்றி வருகின்றார். சுவாமி ர ர என்ற வெற்றி படத்தின் இயக்குநர் சுதீர் வர்மாவின் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் பாடல்கள் நாளை ஏப்ரல் 3 ஆம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
பிவிஎஸ்என் பிரசாத் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் நடிகர் நாகசைதன்யாவிற்கு ஜோடியாக கிரீத்தி சனோன் நடித்து வருகின்றார். இசையமைப்பாளர் சன்னி எம்.ஆரின் இசையில் ஏற்கனவே வெளிவந்துள்ள இப்படத்தின் நான்கு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. நாளை இப்படத்தின் பிற பாடல்களும் வெளிவரும் என எதிர்ப்பாக்கப்பட்ட நிலையில், சில காரணங்களால் இப்படத்தின் பாடல்கள் வெளியீடு ஏப்ரல் 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.