ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இயக்குநர் மணிரத்னம் 'ஓ காதல் கண்மணி' என்ற படத்தை தமிழில் இயக்கி வருகின்றார். இப்படம் ஓகே பங்காரம் என்ற பெயரில் தெலுங்கில் திரைக்கு வருகின்றது. மலையாள நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் தெலுங்கு ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சையமான நடிகை நித்யா மேனன் அவருக்கு ஜோடியாக இப்படத்தில் நடிக்கின்றார். நடிகர் பிரகாஷ்ராஜ் நடிகை கனிகா ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.
'ஓ காதல் கண்மணி' படத்தின் பாடல்கள் எதிர் வரும் 4ஆம் தேதி வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினத்திலேயே இப்படத்தின் தெலுங்கு பதிப்பான ஓகே பங்காரம் படத்தின் பாடல்களும் திரைக்கு வருவதாக தெரிகின்றது. ஆஸ்கர் நாயகன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்களை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை தெலுங்கில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் டில் ராஜு வெளியிடவுள்ளார்.