'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தெலுங்கு சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா ஒரு குழந்தையை போல குணம் படைத்தவர் என்று அவருடைய மனைவியும், முன்னாள் பிரபல நடிகையுமான விஜய நிர்மலா கூறியுள்ளார். சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா தெலுங்கு சினிமா உலகில் நுழைந்து 50 ஆண்டுகள் பூர்த்தி ஆகின்றது. நடிகர் கிருஷ்ணாவிற்கு நடந்த பாராட்டு விழாவில் விஜய நிர்மலா பேசும் போது, அவர் இத்தனை படங்களா நடித்து இருக்கின்றேன் என்று ஆச்சரியப்படுவதுண்டு. சினிமா துறையில் நடக்கும் சில அரசியலை பற்றி அவருக்கு தெரியாது. அவர் ஒரு சிறந்த நடிகர். முந்தய காலகட்டத்தில், அவர் நடித்துக்கொண்டிருக்கும் படங்களின் சில தயாரிப்பாளர்கள் பண நெருக்கடியில் சிக்கும் போது இவர் உதவி செய்திருக்கிறார். அவரைப்போல இப்போது ஒருவரை கூட காண முடியாது. அவருக்கு நான் மனைவி என்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன், என்று கூறியுள்ளார்.