ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ் திரையில் பட வாய்ப்புகள் இல்லாத நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் தெலுங்கு திரையில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து உச்ச நட்சத்திராக வளர்ந்து வருகின்றார். ராகுல் ப்ரீத் சிங், தற்போது தெலுங்கு திரையில் கிக் 2, பந்தாக சேஸ்கோ போன்ற படங்களில் நடித்து வருகின்றார். இது மட்டுமல்லாது பாலிவுட் திரையில் உருவாகும் சிம்லா மிர்ச்சி படத்திலும் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நடித்து வருகின்றார்.
இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள படத்தில் நடிக்கும் ராகுல் ப்ரீத்தி சிங் குறித்து கடந்த சில தினங்களாக வதந்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. ஆனால் இவற்றை திட்டவட்டமாக மறுத்துள்ள நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் இப்படத்தில் நடிக்க தான் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
நடிகர் ஜூனியர் என்டிஆரின் 25வது படமான இப்படத்தின் படப்பிடிப்புகள் ஏப்ரல் மாதம் முதல் தொடங்கவுள்ளன. லண்டனில் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இசையாகும் இப்படத்தினை எஸ்.வி.சி.சி நிறுவனத்தின் சார்பில் பி.வி.எஸ்.என் பிரசாத் தயாரிக்கின்றார்.