'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நமது சினிமா பிரபலங்கள் சில சமயங்களில் சமூக வலைத்தளங்களில் சிறு சிறு தவறுகள் செய்வது வாடிக்கையாகி வருகின்றது. தற்போது பிரபல நடிகர் அக்கினேனி நாகார்ஜுனா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு தவறை செய்துள்ளார். சமீபத்தில் நமது பாட்மிண்டன் ஸ்டாரான சாய்னா நேவால் உலக அளவில் நம்பர் 1 இடத்திற்கு தேர்வாகி உள்ளார். அதனை பாராட்டி தனது டுவிட்டார் பக்கத்தில் நாகார்ஜுனா கருத்தை தெரிவித்து உள்ளார். அதில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த சானியாவுக்கு வாழ்த்து தெரிவிக்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது சாய்னாவுக்கு பதிலாக சானியா என்று அவர் தவறாக குறிப்பிட்டுவிட்டார். அதன் பின் அதற்கு அவர் தனது மன்னிப்பையும் பதிவு செய்துவிட்டார்.