டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
திறமையானவர்களுக்கு எங்கேயாவது வாய்ப்பு கிடைக்கும். அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு வெற்றி பெறுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இளைஞர்கள் இந்த விஷயத்தை இறுக்கமாக பிடித்து கொள்கிறார்கள். அந்த வகையில் இசையமைப்பாளர் சங்கர் வெங்கட்ராமன் குற்றம் கடிதல் படத்துக்கு இசையமைத்து பின்னணி இசையில் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தவர். இந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பே கன்னடப்படத்துக்கு இசையமைக்க சங்கர் வெங்கட்ராமனுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதனால் இளம் இசையமைப்பாளர்கள் வரிசையில் இடம் பிடிக்கிறார். அதோடு மட்டுமல்ல சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு இவர்தான் பிரத்தியேக இசையமைப்பாளர். முதல் முயற்சிக்கு கிடைத்த வெற்றி அடுத்தடுத்து வரும் படங்களுக்கு வெற்றிக்கான படிக்கட்டாக இருக்கும் என்கிறார் சங்கர் வெங்கட்ராமன்.