தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஷால் தற்போது பிரபலமான நடிகரான ரஜினியின் படங்களின் தலைப்பை விலைக் கொடுத்து வாங்கி அதில் நடித்து வருகிறார். ஏற்கனவே நான் சிவப்பு மனிதன் பட தலைப்பை வாங்கி நடித்தவர். தற்போது பாயும் புலி என்ற தலைப்பில் நடித்து வருகிறார். இந்த தலைப்பு பேச்சு வார்த்தையில் இருந்த போது அண்ணன் என்று தலைப்பு வைத்து படபிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டது. எந்த சிக்கலும் இல்லாமல் தலைப்பு ஓகே ஆனதால் பாயும்புலி என்று உறுதியாக வைத்து விட்டனர். இதில் இன்னொரு செய்தி தனது சொந்த பணத்தில் படம் தயாரித்து வரும் ஆர்.கே. பாயும் புலி படத்தில் 60 வயது நிரம்பிய முதியவராக நடிக்கிறார். ஒரு பக்கம் நாயகனாக நடித்தாலும் எந்த தயக்கமும் இல்லாமல் இமேஜ் பாதிக்கும் என்று கூக்குரல் போடாமல் ஆர்.கே. இந்த கேரக்டருக்கு ஒத்துக் கொண்டாராம். இயக்குனர் சுசீந்தரனின் சித்தப்பாவுக்கு ஆர்.கே நண்பர் என்பதால் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து படத்தில் ஆர்.கே.வை நடிக்க வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.