ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விஜய், சமந்தா நடித்த 'கத்தி' படத்திற்குப் பிறகு பாலிவுட் சென்ற ஏ.ஆர்.முருகதாஸ், 'அகிரா' என்ற ஹிந்திப்படத்தை இயக்கி வருகிறார். சோனாக்ஷி சின்ஹா கதாநாயகியாக நடிக்கும் இப்படம் முழுக்க முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்படுகிறது. தமிழில் சாந்தகுமார் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் வெளிவந்த 'மௌனகுரு' படத்தின் கதைதான் அகிரா. முறைப்படி ரீமேக் ரைட்ஸ் வாங்கி, ஹிந்திக்காக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து மாற்றப்பட்டிருக்கிறது. 'அகிரா'வின் முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக மும்பையில் நடைபெற்று வந்தது. முதல்கட்டப்படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், தற்போது 2 ஆம் கட்ட படப்பிடிப்பை தொடங்கிவிட்டார் முருகதாஸ். இதில் நடிகை லட்சுமிராயும் கலந்து கொள்கிறார். ஏன்? அகிராவில் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார் லட்சுமிராய்.