ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அபியும் நானும் மூலம் அறிமுகமானார் கணேஷ் வெங்கட்ராம். அதன் பிறகு உன்னை போல் ஒருவன், கோ, சந்திரா, இவன் வேற மாதிரி படங்களில் நடித்தார். தீயா வேலை செய்யணும் குமாரு, இவன் வேற மாதிரி படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்தார்.
சோலோ ஹீரோவாக வெற்றி பெற வேண்டும் என்பதுதான் கணேஷ் வெங்கட்ராமின் ஆசை. தற்போது நடித்து வரும் அச்சாரம் படத்தில் இரண்டு ஹீரோக்கள் என்றாலும், இவர்தான் முக்கிய ஹீரோவாக நடிக்கிறார். இன்னொரு ஹீரோ முன்னா. கணேஷ் வெங்கட்ராமுக்கு ஜோடியாக பூனம் கவுர் நடிக்கிறார். முன்னாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா தத்தா நடிக்கிறார். பிரதாப் ஒளிப்பதிவு செய்கிறார், ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார். மோகன் கிருஷ்ணா இயக்குகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. கணேஷ் வெங்கட்ராம் இதில் குத்தாட்டம் எல்லாம் ஆடியிருக்கிறார். விரைவில் திருமணம் செய்ய இருக்கும் கணேஷ் வெங்கட்ராமுக்கு இந்த படம் திருமண பரிசாக அமைகிறதா என்று பார்க்கலாம்.