ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தாருநிஷா மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ஞானதேஷ் அம்பேத்கர் வழங்க A.சங்கரபத்மா தயாரிக்கும் “ அச்சாரம் “ படத்தின் பணிகள் அணைத்தும் முடிவடைந்து விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் கணேஷ்வெங்கட்ராமன், முன்னா இருவரும் கதாநாயகர்களாக நடித்திருக்கிறார்கள். கதாநாயகிகளாக பூனம்கவுர், ஐஸ்வர்யா தத்தா இருவரும் நடித்திருக்கிறார்கள். மற்றும் ஞானதேஷ், ரேகா, ராஜலட்சுமி, O.A.K.சுந்தர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குனர் மோகன்கிருஷ்ணாவிடம் கூறியதாவது, கணேஷ்வெங்கட்ராமன் இதில் டெரரிஸ்ட் வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த வேடம் அவருக்கு புதிது. அதை சிறப்பாக செய்திருக்கிறார்.அச்சாரம் படத்திற்காக பாடல் காட்சி ஒன்றை படமாக்க கொடைக்கானல் தாண்டி ஒரு இடத்தை தேர்வு செய்தோம். ரோட்டில் இருந்து அந்த பகுதிக்கு செல்ல வாகனம் எதுவும் போகாது. கால்நடையாகத்தான் போகவேண்டும்.அதற்காக காலை ஆறு மணிக்கே நடக்க ஆரம்பித்தோம்..போய்ச்சேர பதினோரு மணியாகிவிட்டது. கேமரா வைத்தவுடன் வனத்துறையினர் வந்து தடுத்தார்கள் நாங்கள் அனுமதி வாங்கிய விவரத்தை காட்டினோம். நீங்கள் வாங்கி இருப்பது தமிழ்நாட்டில். இது கேரளா வனப்பகுதி நோ ஷூட்டிங் என்றார்கள். வேறு வழியின்றி மீண்டும் நடந்தே திரும்பி வந்தோம். மறுநாள் வேறு இடத்திற்கு போனோம்.. அங்கு வன விலங்குகள் பகுதி உயிருக்கு ஆபத்து என்று தடுத்தார்கள். வேறு வழியில்லாமல் திரும்பினோம்.
மூன்றாவது நாள்தான் பழமுத்தூர் என்ற இடத்தில் முன்னா - பூனம்கவுர் பங்கேற்க
“ பேரழகே திருடிட பிறந்தவன் நீதான்
பேசும் இரு விழிகளை உடையவன் நீதான் “ என்ற பாடலை படமாக்கினோம்.