அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |
'மாஸ்' படத்தின் இசையமைப்புச் சம்பந்தமாக சூர்யாவுக்கும், யுவன்ஷங்கர் ராஜாவுக்கும் மோதல் என்று கடந்த வாரம் செய்திகள் வந்து பரபரப்பை ஏற்படுத்தின. யுவன் கேட்ட சமயத்தில் பாடலைத் தராததால் அவருக்குத் தெரியாமலே இசையைமப்பாளர் தமனிடம் ஒரு குத்துப் பாடலுக்கு இசையமைத்து வாங்கி படப்பிடிப்பை நடத்தினார்கள் என்று சொன்னார்கள். அதைத் தொடர்ந்து 'மாஸ்' படத்திற்கு யுவன்தான் இசையமைப்பாளர் என வெங்கட்பிரபு அதிகாரப்பூர்வமாக அறிவித்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த யுவன்ஷங்கர்ராஜாவிடம் இந்தப் பிரச்சனைப் பற்றி கேட்டதற்கு அவர் அளித்த விளக்கம்...
'நயன்தாரா திடீர்னு தேதி கொடுத்ததால அவரசமா அவங்களுக்கு ஒரு பாட்டு தேவைப்பட்டுது. அந்த அவசரத்துக்கு என்னால அந்தப் பாட்டைக் கொடுக்க முடியலை. அதனால அந்த பாட்டுக்கு நான் டியூன் போட்டேன். தமன் ஆர்க்கெஸ்ட்ரா கன்டக்ட் பண்ணாரு. இதுதான் நடந்தது, ஆனால், அது வேற மாதிரி செய்தியா வெளிய வந்துடுச்சி.
நான் தமன் எல்லாம் அடிக்கடி சந்திச்சிப் பேசிக்குவோம். 'பிரியாணி' டைம்லயே வெங்கட் பிரபு கிட்ட தமன், யுவன் மியூசிக் எனக்குப் பிடிக்கும் அவருடைய பாட்டு ஏதாச்சும் எனக்குக் கொடுங்க, நான் 'மியூசிக் அரேன்ஞ்ச்' பண்ணித் தர்றன்னு கேட்டிருந்தாரு. 'பிரியாணி'க்கே அப்படி பண்ணலாம்னு இருந்தது, ஆனால், அப்ப பண்ண முடியலை. இப்ப அதுக்கு சந்தர்ப்பம் கிடைச்சுது, அதனால 'மாஸ்' படத்துல எனக்காக தமன் மியூசிக் அரேன்ஞ்ச் பண்ணிக் கொடுத்திருக்காரு,” என்றார்.
அப்படியென்றால் அந்தக் குறிப்பிட்ட பாட்டில் யார் பெயர் வரும் என்று கேட்டதற்கு 'டியூன் என்னோடது, ஆனால், அரேன்ஞ்ச் பண்ணது தமன்' என்று பதிலளித்தார் யுவன்.
அந்தப் பாடலுக்கு என்ன பெயர் வரும் என்று படத்தின் இசை வெளியிடப்படும் போதுதான் சிடியைப் பார்த்து தெரிந்து கொள்ள முடியும். அது வரை இசை ரசிகர்கள் காத்திருக்க வேண்டியதுதான்.