பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கழுகு கிருஷ்ணாவுக்கு யாமிருக்க பயமே படத்திற்கு பிறகு மார்க்கெட் ஓரளவு சூடு பிடித்தது. இருப்பினும் அவருக்கு வந்ததெல்லாமே டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டுதான். அதனால் வானவராயன் வல்லவராயன் படத்தில் மா.கா.பா.ஆனந்துடனும், வன்மம் படத்தில் விஜயசேதுபதியுடனும் இணைந்து நடித்தவர், இப்போது யாட்சன் படத்தில் ஆர்யாவுடன் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில், அடுத்தபடியாக கிரகணம் என்றொரு படத்தில் கப்பல் பட நாயகன் வைபவுடன் இணைந்து நடிக்கிறார். ஏப்ரல் 2-ந்தேதி இபபடத்தின் பூஜை சென்னையில் நடைபெற உள்ளது.
மேலும், இப்படத்தில் வைபவுக்கும் கிருஷ்ணாவுக்கு இணையான வேடம்தானாம். டமால் டுமீல், கப்பல் படங்களில் ஷோலோ ஹீரோவாக நடித்த வைபவ், அதற்கு முன்பு ஈசன், அனாமிகா, ஆம்பள படங்களில் இரண்டாவது ஹீரோவாக நடித்தார்.