தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சாதன் என்பவர் இயக்கி தயாரிக்கும் படம் ஸ்வர்ணமஹால். தெலுங்கு, தமிழ் மொழியில் தயாராகி உள்ள இந்தப் படத்தில் மனோஜ், அலிஷா, சுமன் ஷெட்டி, ரத்னகுமாரி நடிக்கிறார்கள்.
"ஸ்வர்ணமஹால் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அழகான பெண் ஒருத்தி, அந்த குடியிருப்பின் மாடியில் இருந்து விழுந்து இறந்து போகிறார். அது தற்கொலை என்று போலீஸ் பைலை மூடுகிறது. தற்கொலை அல்ல கொலை என்பதை இறந்த பெண்ணே பேயாக வந்து நிரூபிப்பதோடு, தன்னை கொலை செய்தவர்களை பழிவாங்குவதும்தான் கதை. பாடல் காட்சியோ, சண்டைக் காட்சியோ இல்லாமல். ஹாலிவுட் பாணியில் இரண்டு மணி நேரம் திக் திக் திகிலுடன் பார்க்கிற அளவிற்கு விறுவிறுப்பான திரைக்கதையுடனும், காட்சி அமைப்புடனும் படத்தை உருவாக்கி இருக்கிறோம்" என்கிறார் இயக்குனர் சாதன். எச்.கே.பிருந்தா இசை அமைத்துள்ளார், ஹரீஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் பின்னணி இசை கோர்ப்பு பணிகள் நடந்து வருகிறது-. அடுத்த மாதம் தெலுங்கு, தமிழில் ஒரே நேரத்தில் வெளியாகிறது.