என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு |
இரு தினங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியான 'ஒரு வடக்கன் செல்பி' படம் இளைஞர்களின் ஹாட் டாக், ஹாட் கேக் எல்லாமுமாக ஆகியிருக்கிறது. படத்தினை இயக்கியுள்ள பிரஜித், நடித்துள்ள நிவின்பாலி, வினீத் சீனிவாசன், அஜு வர்கீஸ், இசையமைத்துள்ள ஷான் ரஹ்மான் ஆகியோர் ஒன்றுகூடி நிவின் பாலியின் வீட்டில் இந்த வெற்றியை கொண்டாடி இருக்கிறார்கள். தனியாக இல்லை அனைவரும் குடும்பத்துடன் வந்து கொண்டாடியதோடு ஒரு குடும்ப செல்பியையும் எடுத்து பதிவிட்டிருக்கிறார்கள்.
இதே டீம் தான் ஐந்து வருடங்களுக்கு முன் வெளியான 'மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்'பிலும் இடம்பெற்றிருந்தது. என்ன வித்தியாசம் என்றால் அந்தப்படத்தில் வினீத் சீனிவாசன் முதன்முதலாக இயக்குனராக அறிமுகமாக, தற்போது 'ஒரு வடக்கன் செல்பி' படத்தை இயக்கியுள்ள பிரஜித் அவரிடம் துணை இயக்குனராக வேலை பார்த்தார்.. இன்னும் ஒரு முக்கிய தகவல், ஐந்து வருடங்களுக்கு முன் அந்தப்படத்தின்போது பேச்சிலராக இருந்த இவர்கள் அனைவருக்கும் 'டும் டும்' கொட்டியாகிவிட்டது.