மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
காதலை தினுசு தினுசாக காட்டியது சினிமா. கண்டவுடன் காதல், பார்க்காமலே காதல், விளையாட்டு காதல், விபரீத காதல், சைக்கோ காதல் இப்படி நிறைய பார்த்துவிட்டோம். விரைவில் கைபேசி காதல் என்ற படம் வெளிவர இருக்கிறது. இதில் ஹீரோ ஒரு பெண்ணை காதலிக்காமல் ஒரு செல்போனை காதலிக்கிறார். அதனுடனேயே வாழ்கிறார். உலகம் அவரை பைத்தியகாரனாக பார்க்கிறது. ஆனால் செல்போன் அவரது வாழ்க்கைக்கு பாதை காட்டுகிறது. ஹீரோவின் மனநிலையை மாற்றி தன் மீது காதல் கொள்ள போராடுவதுதான் ஹீரோயின் வேலை.