பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சென்னையில் இயங்கும் இண்டோ சினி அப்ரிசேஷன் அமைப்பும், டெல்லியில் உள்ள ஐரோப்பிய யூனியன் பிரநிதிகள் குழுவும், மேக்ஸ் முல்லர் பவனும் இணைந்து சென்னையில் ஐரோப்பிய திரைப்பட விழாவை நடத்துகிறது. வருகிற 31ந் தேதி முதல் அடுத்த மாதம் 10ந் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது. சென்னை அல்லையன்ஸ் பிரான்சைஸ் ஆடிட்டோரியத்தில் நடக்கும் இந்த விழாவில் தினமும் 2 படங்கள் திரையிடப்படுகிறது. அது தொடர்பான கருத்தரங்குகளும் நடக்கிறது. வருகிற 31ந் தேதி நடக்கும் துவக்க விழாவில் தமிழ்வளர்ச்சித் துறை செயலாளர் எம்.ராஜாராம் கலந்து கொண்டு துவக்கி வைக்கிறார். பெல்ஜியம் தூதர் டாக்டர் பார் தே குரூப், அல்லையன்ஸ் பிரான்சைஸ் இயக்குனர் பியர்ரே இம்மானுவேல் ஜேக்கப், இண்டோ அப்ரிசேஷன் தலைவர் சிவகண்ணன், செயலாளர் தங்கராசு உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.