இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
வடகறி, திருமணம் என்னும் நிக்கா படங்களுக்கு முன்பே ஜெய் நடித்த படம் அர்ஜூனன் காதலி. பார்த்தி பாஸ்கர் இயக்கியுள்ள இந்த படத்தில் பூர்ணா நாயகியாக நடித்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ள இப்படத்தை சி2எச்சில் வெளியிடுவதாக முன்பு செய்திகள் வெளிவந்தன.
ஆனால், இப்போது ஜெய் நடித்த வலியவன் படம் திரைக்கு வந்திருப்பதோடு அடுத்தபடியாக அவர் நடித்துள்ள புகழ் படமும் ரிலீசுக்கு தயாராகி வருவதால், இந்த படங்களோடு அர்ஜூனன் காதலி படத்தையும் தியேட்டருக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளார்களாம்.
இதற்கு இன்னொரு காரணமும் உள்ளதாம். அதாவது, இந்த படத்தில் ஜெய், பூர்ணாவோடு தம்பி ராமைய்யா, லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோருடன் மெட்ராஸ் படத்தில் நடித்த கலையரசனும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளாராம். தற்போது அவர் பல படங்களில் ஹீரோவாக நடித்து வருவதால், அவருக்கு இருக்கிற மார்க்கெட்டை மனதில் கொண்டு அர்ஜூனன் காதலியை தியேட்டரில் வெளியிடுகிறார்களாம். ஆக, ஜெய்யை விட கலையசரனை அதிகமாக நம்பிதான் தியேட்டருக்கு வருகிறதாம் அர்ஜூனன் காதலி.