ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஆர்யா நடித்த 'ராஜா ராணி' படத்தை இயக்கி முதல் படத்திலேயே வெற்றியடைந்த அட்லி, அடுத்து விஜய்யின் 59-ஆவது படத்தை இயக்க இருக்கிறார்.
விஜய்யை வைத்து சச்சின், துப்பாக்கி படங்களை தயாரித்த 'கலைப்புலி' எஸ்.தாணு 3ஆவது தடவையாக விஜய்யை வைத்து இப்படத்தை தயாரிக்கிறார்.
கத்தி ராசி காரணமாக இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். அட்லியின் 'ராஜா ராணி' படத்திற்கு இசை அமைத்த ஜி.வி.பிரகாஷ்குமாரே இப்படத்திற்கு இசை அமைக்கிறார்! ஆறு மாதகாலமாக கதைவிவாதம் நடத்தி ஸ்கிரிப்ட்வொர்கை முடித்துவிட்டு தற்போது இப்படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் வேலைகளில் படு பிசியாக இயங்கி வருகிறார் அட்லி. படத்திற்கான மற்ற நடிகர், நடிகைகளின் தேர்விலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தில் ராதிகாவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
இந்த தகவலை அவரே ட்வீட் செய்துள்ளார். என்ன கேரக்டர்? விஜய்யின் அம்மாக நடிப்பதாக கேள்வி. கமல், ரஜினி, அஜித், பிரசாந்த் உட்பட தமிழின் பெரும்பாலான முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துவிட்டார் ராதிகா. அவர் இதுவரை விஜய் உடன் மட்டும் நடிக்கவில்லை! விஜய், ராதிகா இணைந்து நடிக்கும் முதல் படம் என்ற பெருமை அட்லி இயக்கும் படத்திற்கு கிடைத்திருக்கிறது.