ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம் நடித்துள்ள ''புறம்போக்கும்'' படம் அஜித் பிறந்தநாளான மே 1ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை, ஈ, பேராண்மை போன்ற படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் இயக்கியுள்ள புதிய படம் புறம்போக்கு. முதன்முறையாக ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம் மூன்று ஹீரோக்கள் கூட்டணி சேர்ந்துள்ளனர். கார்த்திகா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் சென்னை, ஆந்திரா, ராஜஸ்தான் என பல ஊர்களில் நடத்தப்பட்டு ஷூட்டிங் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் வேலைகள் நடந்து வருகிறது. யுடிவி-யும், எஸ்.பி.ஜனநாதனும் இணைந்து தயாரித்துள்ளனர்
சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வௌியிடப்பட்டது, டிரைலருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து யுடிவியின் தனஞ்செயன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, புறம்போக்கு படத்தின் இசை ஏப்ரல் முதல் வாரத்திலும், மே 1ம் தேதி, படமும் ரிலீஸாகும் என தெரிவித்துள்ளார்.