இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கார்த்தி, தமன்னா ஜோடி சேர்ந்து நடித்து சில வருடங்களுக்கு முன் வெளிவந்த 'பையா, சிறுத்தை' ஆகிய இரண்டு படங்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. அதன் பின் அந்த ஜோடியை ஒரு ராசியான ஜோடி என திரையுலகத்தினர் அழைக்க ஆரம்பித்தனர். தொடர்ந்து அவர்கள் இருவரையும் சில படங்களில் ஒன்றாக நடிக்க வைக்க சில தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் முன் வந்தனர். ஆனால், அதற்குள் அவர்களிருவருக்கு இடையே காதல் என கிசுகிசுக்கள் வெளிவந்ததால் அதன் பின் அவர்கள் இருவரும் சேர்ந்தே நடிக்கவில்லை. தமன்னாவும் தமிழ்ப் பட உலகத்தை விட்டே விலகினார். இந்தப் பக்கம் அவர் எட்டிக் கூடப் பார்க்கவில்லை. இதற்கு கார்த்தி, தமன்னாவின் காதல் கிசுகிசுதான் காரணம் என்றும் சொல்லப்பட்டது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமன்னா 'வீரம்' படத்தின் மூலம் கடந்த ஆண்டு தமிழ்ப் பக்கம் வந்தார். தொடர்ந்து அவரைத் தேடி வந்த வாய்ப்புகளில் ஆர்யா ஜோடியாக நடிக்கும் 'வாசுவும் சிவாவும் ஒண்ணா படிச்சவங்க' படத்தை மற்றும் ஏற்றுக் கொண்டார்.