இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கிராமத்தில் உள்ள மாமன், மருமகன் இடையிலான சென்ட்டிமென்ட்டான உறவைப்பற்றிச் சொல்லும் கதையை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம்தான் - கொம்பன்.
ஏற்கனவே கொம்பன் படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியாகிவிட்டன. அவற்றில் ஆட்சேபகரமான எந்த காட்சிகளும் வசனங்களும் இல்லை.
அப்படி இருந்தும் கொம்பன் படத்திற்கு தடை கேட்டு தமிழக முதல்வரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. கொம்பன் படம் திரைக்கு வர சில நாட்களே உள்ளநிலையில் இப்படி ஒரு எதிர்ப்பு கிளம்பியுள்ளது கொம்பன் வெளியீட்டுக்கு முட்டுக்கட்டையாகி உள்ளது. 'கொம்பன்' படம் முதுகுளத்தூர் கலவர சம்பவத்தை பின்னனியாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் தியாகி பேரையூர் வேலுச்சாமி நாடாரை கலங்கப்படுத்தும் காட்சிகள் இருப்பதாகவும் தெரிகிறது. படத்தின் பெயரான 'கொம்பன்' என்ற தலைப்பே சண்டையைத் துண்டுவதாக இருக்கிறது. கடந்த ஆறு மாதங்களாக தமிழகத்தில் சாதி கலவரங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இந்த படம் வெளியானால் மேலும் இந்த கலவரங்கள் அதிகரிக்கும். என தமிழ் நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ் என்பவர் அந்த மனுவில் தெரிவித்திருப்பதோடு, கொம்பன் படத்திற்கு தடையும் கேட்டுள்ளார். இன்னொரு பக்கம், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி உட்பட பத்துக்கும் மேற்பட்ட தலித் அமைப்புகள் சார்பிலும் கொம்பன் படத்துக்கு எதிராக தணிக்கை அதிகாரியிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
கொம்பன் படத்துக்கு யாருமே எதிர்பாராதவகையில் திடீரென இப்படி ஒரு எதிர்பார்ப்பு கிளம்பியது ஏன்?
சில மாதங்களுக்கு முன் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்திலிருந்து சிலரை வேலையைவிட்டு நீக்கினார்களாம். அவர்களில் சிலர்தான் சாதி அமைப்புகளை சேர்ந்தவர்களிடம் கொம்பன் படத்தின் கதையை சீன் பை சீன் சொல்லி கொளுத்திப்போட்டிருக்கிறார்கள்.
அவர்கள் வைத்த தீ தான் தற்போது கொம்பன் படத்துக்கு எதிராக எரிந்து கொண்டிருக்கிறது.