Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தூசு தட்டப்படும் தனுஷ் படங்கள்

28 மார், 2015 - 11:15 IST
எழுத்தின் அளவு:
Dhanush-movies-dubbed-in-telugu

தனுஷ் நடித்த சில படங்கள் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு ஓரளவிற்கு வசூலானதைத் தொடர்ந்து அவருடைய பழைய படங்கள் அனைத்தையும் இப்போது தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட தூசு தட்ட ஆரம்பித்துள்ளார்களாம். 'வேலையில்லா பட்டதாரி' படம் 'ரகுவரன் பி.டெக்' என்ற பெயரில் டப்பிங் ஆகி வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து 'அனேகன்' படத்தையும் 'அனேகடு' என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிட்டனர், அந்த படமும் கொஞ்சம் வசூலானது.


இப்போது தனுஷுக்கு தெலுங்கிலும் ஒரு சிறிய மார்க்கெட் ஓபனாகி இருப்பதால் அவருடைய பழைய படங்களையெல்லாம் தெலுங்கில் ரிலீஸ் செய்து வசூலை அள்ள பல தயாரிப்பாளர்கள் முன் வந்திருக்கிறார்களாம். அதனால், தனுஷ் நடித்து இங்கு ஓடிய, ஓடாத படங்கள் என்னவென்று கணக்கெடுக்கும் பணியையும் ஆரம்பித்து விட்டார்களாம். ஏற்கெனவே, தனுஷ் ஹிந்தியில் 'ராஞ்சனா' மூலம் அறிமுகமாகி பாலிவுட்டிலும் புகழ் பெற்ற பிறகு அவருடைய பல தமிழ்ப் படங்களை ஹிந்தியில் டப்பிங் செய்து சாட்டிலைட் டிவிக்களில் ஒளிபரப்ப ஆரம்பித்தார்கள்.


விரைவில், தனுஷ் நடித்த படங்கள் தெலுங்கில் டப்பிங் ஆகி ஒன்றன் பின் ஒன்றாக வெளிவர ஆரம்பிக்கும். தனுஷுக்குத் தெலுங்குதான் தாய் மொழி என்பதால் அவர் நேரடித் தெலுங்குப படத்தில் நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in