ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பை அரையிறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி எப்படியும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று விடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், எதிர்பாராதவிதமாக இந்திய அணி தோல்வியைத் தழுவியது. நமது சமூக வலைத்தள குறும்பர்களும் இந்திய அளவில் அந்தப் போட்டியைப் பார்க்கச் சென்ற அனுஷ்கா ஷர்மாவை திட்டித் தீர்த்து 'மீமீ'க்களை போட்டுத் தள்ளி விட்டனர். கடந்த இரண்டு நாட்களாக இவைதான் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வந்தது.
அனுஷ்கா ஷர்மாவை ரசிகர்கள் இப்படித் திட்டுவது தவறு என அவருக்கு ஆதரவாக பாலிவுட் நட்சத்திரங்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். அவர் மற்றவர்களைப் போல மேட்சைப் பார்க்கச் சென்றிருக்கிறார், அவ்வளவுதான், அணி தோற்றதற்கு அவரை ஏன் குறை சொல்ல வேண்டும் என்கிறார்கள்.
அதிலும் ரிஷிகபூர், சமூக வலைத்தளங்களில் கிண்டலடிப்பவர்கள் 'படிக்காத முட்டாள்கள்' என்று கோபத்துடன் கூறியிருக்கிறார். சமூக வலைத்தளங்களில் பரவிய கமெண்ட்டுகள் பெரும்பாலும் ஜாலியான கமெண்ட்டுகள்தான், ஒரு சிலரைத் தவிர யாரும் அதை சீரியசாகப் போடவில்லை. அதற்கு ரிஷி கபூர் கோபமாக 'படிக்காத முட்டாள்கள்' என்று கூறியிருப்பதும் கண்டிப்பாக கமெண்ட்டுகளுக்கு ஆளாகும்.