'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
பெங்களூர் டேஸ் படத்தின் தமி்ழ் ரீமேக்கில், நடிப்பதற்காக, பிபாஷா பாசு உடனான நியா படத்திலிருந்து ராணா டகுபதி விலகியுள்ளார். வஷூ பாக்னானி தயாரிப்பில், விக்ரம் பட்னீஸ் இயக்குநராக அறிமுகமாகும் நியா படத்தில், பிபாஷா பாசுவிற்கு, ஜோடியாக ராணா டகுபதி நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மலையாளத்தில் பெரும்வெற்றி பெற்ற பெங்களூர் டேஸ் படம், தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இந்த படத்தில், ஆர்யா, பாபி சிம்ஹா, ராணா டகுபதி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பெங்களூர் டேஸ் படத்தின் ரீமேக் பணி்கள் விரைவில் துவங்க உள்ளது. இந்நிலையில், நியா படத்தின் பணிகளும் துவங்குமேயானால், இரு படத்தில் ஒரே நேரத்தில் நடிக்க முடியாது என்பதால், நியா படத்திலிருந்து விலகிக்கொள்வதாக, ராணா டகுபதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.