ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வெங்கட்பிரபு இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகி வரும் மாஸ் படத்தின் சூட்டிங், மொட்டை (நான்கடவுள்) ராஜேந்திரனின் கால்ஷீட்டிற்காக நிறுத்தப்பட்டு, தற்போது மீண்டும் சூட்டிங் துவங்க உள்ளது.படத்தின் ஹீரோக்கள், ஹீரோயினின் கால்ஷீட்டுக்காக காத்திருந்த காலம்போய், தற்போது காமெடி கேரக்டரில் நடிப்பவர்களின் கால்ஷீட்டிற்காக காத்திருக்கும் காலம் கனிந்துள்ளது.
வெங்கட்பிரபு இயக்கத்தில், சூர்யா நடித்து வரும் மாஸ் படத்தின் படப்பிடிப்பு, துவங்கி நடைபெற்று வந்தது. வில்லனாக அறிமுகமாகி தற்போது காமெடியில் கலக்கி வரும் மொட்டை ராஜேந்திரனும் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால், அவர் பல்வேறு படங்களில் தொடர்ந்து நடித்துக்கொண்டு இருந்ததால், மாஸ் பட சூட்டிங்கில் அவரால் கலந்துகொள்ள இயலவில்லை. உடனே படக்குழு, சூட்டிங் முடிவடைந்தவரையிலான போஸ்ட் புரொடெக்சன் வேலைகளை மேற்கொண்டது.
படுபிசியாக இருந்த மொட்டை ராஜேந்திரன், தற்போது மாஸ் பட சூட்டிங்கில் கலந்துகொள்ள உள்ளார். நாளை மகாபலிபுரம் பகுதியில், சூர்யா - மொட்டை ராஜேந்திரன் மோதும் சண்டைக்காட்சி படமாக்கப்பட உள்ளது. இதனைத்தொடர்ந்து, நயன்தாரா உடனான பாடல் காட்சியும் படமாக்கப்பட உள்ளது.
சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பிலான 36 வயதினிலே படத்தின் ரிலீசிற்கு பிறகு, மாஸ் படம் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.