Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சுகன்யாவுக்காக அடக்கி வாசித்த மஞ்சுவாரியர்..!

27 மார், 2015 - 12:34 IST
எழுத்தின் அளவு:
Manju-Warrier-reduces-his-voice-to-Suganya

படம் ஆரம்பித்ததும் தெரியவில்லை.. முடிந்ததும் தெரியவில்லை என்பது போல மோகன்லால், மஞ்சு வாரியர் நடிப்பில் என்னும் எப்பொழும் படத்தை வெற்றிகரமாக முடித்து இன்று ரிலீஸாகும் விதமாக தியேட்டர்களுக்கு அனுப்பிவைத்துவிட்ட ஆசுவாசத்தில் இருக்கிறார் படத்தின் இயக்குனரான சத்யன் அந்திக்காடு. படம் பற்றி சமீபத்தில் பேசிய இயக்குனர் மஞ்சு வாரியர் இஸ் தி பெஸ்ட் என குறிப்பிட்டுள்ளார்.


“மஞ்சு வாரியர் நடிக்க வந்த புதிதில் இயக்குனர் சொல்வதை செய்துவிட்டு போகும் கிளிப்பிள்ளையாகத்தான் இருந்தார். ஆனால் போகப்போக நடிப்பில் ராட்சசியாக மாறிவிட்டார். 15 வருடங்களுக்கு முன் தூவல் கொட்டாராம் படத்தை இயக்கியபோது அதில் நடித்த சுகன்யா, ஒரு பாடல் காட்சியில் இவர் அளவுக்கு மேட்ச் செய்யமுடியாமல் தடுமாறியபோது, அவருக்காக மஞ்சுவாரியரை அண்டர்பிளே செய்யுமாறு கேட்டுக்கொண்டேன்” என சுகன்யாவுக்காக மஞ்சு வாரியர் அடக்கி வாசித்த கதையை நினைவு கூர்ந்திருக்கிறார் சத்யன் அந்திக்காடு.


அதுமட்டுமல்ல, நடனத்தில் ஷோபனாவுக்கு அடுத்த இடம் மஞ்சு வாரியருக்குத்தான் என்றும் கூறியுள்ள்ளார் அவர். மஞ்சு வாரியர் திருமணம் செய்து நடிப்பு, நாட்டியம் இவற்றை விட்டு ஒதுங்கிய பின்னர் நீண்ட நாட்கள் கழித்து இரண்டாவது முறையாக அரங்கேற்றம் செய்தபோது, அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவரை உற்சாகப்படுத்தியவர் தான் சத்யன் அந்திக்காடு. திலீப்பின் விருப்பத்திற்கு மாறாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சி தான், கணவன் மனைவி இருவருக்குமான கருத்து வேறுபாட்டை துவக்கி வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in