ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கார்த்தி, லட்சுமி மேனன், ராஜ்கிரண் நடித்துள்ள படம் கொம்பன். சுந்தரபாண்டியன் பட இயக்குனர் எம்.முத்தையா இயக்கி உள்ளார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். படம் வருகிற ஏப்ரல் 2ந் தேதி வெளிவருகிறது. இந்தப் படம் ராமநாதபுரம் பகுதியை கதை களமாக கொண்டது. படத்திற்கு சில குறிப்பிட்ட ஜாதி அமைப்புகள் ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ் நேற்று (மார்ச் 26) முதல்வரின் தனி பிரிவில் படத்தை தடை செய்ய வேண்டும் என்ற மனு கொடுத்தார். அந்த மனுவின் சுருக்கம் வருமாறு:
கொம்பன் படம் முதுகுளத்தூர் கலவர சம்பவங்களை பின்னணியாக கொண்டு உருவாகி இருப்பதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கிறது. அதோடு சுதந்திர போராட்ட தியாகி பேரையூர் வேலுச்சாமி நாடாரை களங்கப்படுத்தும் காட்சிகள் இருப்பதாகவும் தெரியவருகிறது. படத்தின் தலைப்பே வன்முறையை தூண்டுவதாக உள்ளது.