இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நீண்டஇடைவேளைக்கு பிறகு ஜோதிகா நடித்துள்ள படம் '36 வயதினிலே'. இப்படம் மலையாள 'ஹவ் ஓல்ட் ஆர் யூ' படத்தின் ரீ-மேக் என்பதும், இப்படத்தை மலையாள இயக்குநர் ரோஷன் ஆன்ட்ரூஸ் இயக்கியிருக்கிறார் என்பதும் தெரிந்த விஷயம். '36 வயதினிலே'படத்தின் ஆடியோவை ஏப்ரல் 1-ஆம் தேதி அன்று வெளியிட இருப்பதாக முதலில் தகவல் வெளியாகியிருந்தது. இதை சூர்யா தரப்பினரும் உறுதி செய்திருந்தனர். இந்நிலையில் அந்த திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1-ஆம் தேதி அன்று இப்படத்தின் ஒரு பாடலை மட்டும் வீடியோ வடிவில் வெளியிடுகிறார்கள். ஜோதிகாவுக்கு பில்ட்அப் கொடுப்பதுபோல் உருவாக்கப்பட்டுள்ள 'ராசாத்தி' என்ற பாடல்தான் முதலில் வெளியிடப்பட உள்ளது. சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ள ராசாத்தி பாடலின் வெளியீட்டை அடுத்து சில நாட்கள் கழித்து அதாவது ஏப்ரல் 5-ஆம் தேதி அன்று 36 வயதினிலே படத்தின் மொத்த பாடல்களையும் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்! இப்படத்தை சூர்யாவின் '2டி என்டர்டெயின்மென்ட்' நிறுவனம் தயாரித்துள்ளதால் சூர்யா மற்றும் ஜோதிகாவின் ரசிகர்களிடையேயும் 36 வயதினிலே படம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இப்படம் மே மாதம் ரிலீசாகிறது.