தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'தம்பி வெட்டோத்தி சுந்தரம், கன்னியும் காளையும் செம காதல்' ஆகிய படங்களை இயக்கிய வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், லட்சுமிராய் மற்றும் பலர் நடிக்க 'சௌகார்பேட்டை' என்ற படம் சில நாட்களுக்கு முன் பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் படத்திற்காக வெளியிடப்பட்ட புகைப்படங்கள் மிரட்டலாக இருந்தாலும் படத்தில் நட்சத்திரங்களின் தோற்றம் இதற்கு முந்தைய சில படங்களை ஞாபகப்படுத்துவதாக உள்ளது. அதிலும் லட்சுமி ராயின் புகைப்படம் அப்படியே 'அருந்ததி' படத்தில் அனுஷ்கா இருந்ததைப் போன்றே உள்ளது.
சமீப காலமாக பேய், மர்மம், திகில் ஆகியவை கலந்த படங்கள் நல்ல வெற்றியைப் பெறுவதைத் தொடர்ந்து தமிழில் இப்படிப்பட்ட படங்கள் அதிகமாகவே வெளிவந்து கொண்டிருக்கின்றன, பல படங்கள் தயாராகி வருகின்றன. அந்த வரிசையில் இந்தப் படமும் இடம் பிடிக்கும். இருந்தாலும் ஒரே மாதிரி பார்த்துப் பழகிய நடிகர் ஸ்ரீகாந்தை ஒரு புதுத்தோற்றத்தில் அடையாளம் தெரியாத அளவிற்கு மாற்றியிருப்பதும், லட்சுமி ராய்க்கும் ஒரு புதுத் தோற்றத்தைக் கொடுத்திருப்பதும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.