இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தற்போது அதிக படங்களை வைத்திருக்கும் காமெடியன்களில் இமான் அண்ணாச்சியும் ஒருவர். கடந்த ஆண்டும் மட்டும், பட்டைய கிளப்பு பாண்டியா, பூஜை, மெட்ராஸ், கயல், சண்டமாருதம், காக்கி சட்டை என பத்து படங்களில் இவர் நடித்திருந்தார். அதோடு அவர் நடித்த பல படங்கள் இன்னும் வெளிவராமலும் உள்ளன. அதைத் தொடர்ந்து இவ்வாண்டும் அவர் முந்தைய ஆண்டை போலவே பிஸிதானாம். அதில் புலி, அஞ்சல, நீயெல்லாம் நல்லா வருவடா ஆகிய படங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாம்.
இதில் விஜய்யுடன் நடிக்கும் புலி படத்தில் கிட்டத்தட்ட இமான் அண்ணாச்சிதான் லீடு காமெடியனாம். இதற்கு முன்பு விஜய்யுடன் நடித்த வேட்டைக்காரன், ஜில்லா படங்களை விட இந்த படத்தில் அவருக்கு வெயிட்டான வேடமாம். இதே படத்தில் தம்பி ராமைய்யா, ரோபோ சங்கர் ஆகியோரும் காமெடி டீமில் இருந்தபோதும், வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடி காட்சிகள் இமான் அண்ணாச்சிக்கே அதிகமாக உள்ளதாம். அதனால் இந்த ஆண்டின் எனக்கு முக்கியமான படமே புலிதான் என்று சொல்லும் அவர், இந்த படத்தை தான் பெரிய அளவில் எதிர்பார்ப்பதாகவும் சொல்கிறார்.