இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் |
சாக்லேட் அதிகம் சாப்பிடுவதை உடனே நிறுத்தாவிட்டால் ஜில் பட அழகு நடிகை ராஷி கண்ணாவுக்கு வாய்ப்புகள் குறையும் என்று டோலியுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சாக்லேட் அதிகம் சாப்பிடுகிறாராம். அவர் சாக்லேட் அதிகம் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும் என்றும் அதன் மூலம் அவருடைய அழகான உடல் அமைப்பில் மாற்றம் ஏற்பட்டுவிடும் என்றும் அவருடைய நலன் விரும்பிகள் கூறுகின்றனர். ஒரு நடிகைக்கு நல்ல மார்க்கெட் இருக்கும் போது அவர் தன்னுடைய உடலை நல்ல வகையில் பராமரித்து கவர்ச்சியாக வைத்து கொள்ள வேண்டியது மிக அவசியமாகும். பல நடிகைகள் உடல் எடை அதிகரித்த காரணத்திற்காகவே தங்களது மார்க்கெட்டை இழந்தது குறிப்பிடத்தக்கது.