ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இன்று இந்திய, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் அரையிறுதிப் போட்டியை கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருமே ஆர்வத்துடன் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். நமது திரையுலகத்தினர் பலரும் தீவிர கிரிக்கெட் ரசிகர்கள்தான். இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றதிலிருந்தே நமது நட்சத்திரங்கள், வாழ்த்துகளையும் அவர்களது ஆர்வத்தையும் வெளிப்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். அவர்களுக்கும் மேட்ச் முடியும் வரை அதைத் தவிர வேறு எதைப் பற்றியும் பேச மாட்டார்கள், ஏன் சினிமாவையே கூட மறந்துவிட்டார்கள் என்று சொல்லுமளவிற்கு கிரிக்கெட்டைப் பற்றி மட்டுமே பேசி வருகிறார்கள்.
காலையிலே வாழ்த்துகளை கூற ஆரம்பித்து விட்டார்கள். பாலிவுட் நட்சத்திரங்கள், தென்னிந்திய நட்சத்திரங்கள் என அனைவருமே வாழ்த்து மழை பொழிய ஆரம்பித்துவிட்டார்கள். கிரிக்கெட்டைப் பார்க்காதவர்கள் கூட அவரவர் ரசிகர்களுக்காகவாவது வாழ்த்து சொல்லி வருகிறார்கள். டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் ஒவ்வொரு நட்சத்திரத்தின் விதவிதமான வாழ்த்துகளை பார்த்து ரசிக்க முடிகிறது.
அதோடு விட்டால் பரவாயில்லை, இன்றை சூழ்நிலையில் ஒரு படத்தைப் பார்க்கும் போதே படத்துக்கே காட்சிக்கு காட்சி கமெண்ட்டுகளை சமூக வலைத்தளங்களில் அள்ளித் தெளிப்பார்கள். இன்று ஓவருக்கு ஓவர், பந்துக்குப் பந்து யார் யார் என்ன கமெண்ட் அடிப்பார்களோ என்று நினைத்தால்தான் பகீர் என்று இருக்கிறது. நமது நட்சத்திரங்களும் இன்றைக்கு கமெண்டேட்டர்களாக இருப்பதைக் கண்டிப்பாகப் பார்க்கலாம்.