தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இசையமைப்பாளர் தமனுக்கு, நடிகைகளை பின்னணி பாட வைப்பதில், அப்படி என்ன சந்தோஷம் கிடைக்கிறது என, தெரியவில்லை. பிரபல நடிகைகளை எல்லாம் குத்துப் பாடல்கள் பாட வைப்பதில் அவர் கில்லாடி. தமனின் இந்த வரிசையில், 'சுப்ரமணியபுரம்'
சுவாதியும் இணைந்துள்ளார்.
'ஜெயம்' ரவி நடிக்கும் படத்தில், குத்துப் பாடல் பாட, சுவாதிக்கு அழைப்பு விடுத்துள்ளார் தமன். அவரும் சம்மதித்து விட்டாராம்; இந்த பாடலை அவருடன் இணைந்து பாட இருப்பது சிம்பு. இதற்காக சிம்புவை அணுகியபோது, 'ஓகே' சொன்னாலும், இன்னும் தேதியை உறுதி செய்ய வில்லையாம். எப்படியோ, அதிக படங்களில் நடிக்க முடியவில்லையே என, புலம்பி வந்த சுவாதி, பாட்டு பாடவாவது வாய்ப்பு கிடைக்கிறதே என, சந்தோஷப்பட வேண்டியது தான்.