'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஆட்டோகிராப் மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமானாலும், விஜய்யின் தங்கச்சி 'கருப்பு'வாக நடித்த திருப்பாச்சி தான் மல்லிகாவை ரசிகர்களிடம் நன்றாக அடையாளம் காட்டியது. திருச்சூரை சேர்ந்த இவர் தொடர்ந்து தமிழ், மலையாள படங்களில் நடித்து வந்தார். குறிப்பாக மோகன்லாலுடன் நடித்த சினேகா வீடு' மற்றும் பிருத்விராஜின் தங்கையாக நடித்த, 'இந்தியன் ரூபி' ஆகிய படங்களில் ரசிகர்களின் பாராட்டை பெற்றார். அவர் நடித்த பியாரி படத்திற்காக தேசிய விருதும் (ஸ்பெஷல் ஜூரி) அவருக்கு கிடைத்தது.
தற்போது மலையாளத்தில் ஒரு படம் இயக்கப்போவதாக சொல்லி நம்மை ஆச்சர்யபடுத்துகிறார் மல்லிகா. யமுனாராணி என்கிற நடிகையையும் அவளுக்கு டூப்பாக நடிக்கும் பழனியை சேர்ந்த கனகா என்கிற பெண்ணின் கதையையும் படமாக்க இருக்கிறார். இந்தப்படத்திற்கு இசையமைப்பதன் மூலம் பின்னணி பாடகி மஞ்சரி இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இந்தப்படத்தில் கதாநாயகிகளாக பாவனாவுடன் சேர்ந்து தானும் கனகா என்கிற டூப் வேடத்தில் நடிக்கிறார் மல்லிகா.