Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இரட்டையர் வில்லன்கள் CSK- சார்லஸ் ஷஃபிக் கார்த்திகா

25 மார், 2015 - 17:53 IST
எழுத்தின் அளவு:
Daul-villains-in-CSK

SS ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில், வைப்ரன்ட் மூவீஸ் வெளியீட்டில் மார்ச் 27 ஆம் தேதி வெளிவருகிறது 'CSK - சார்லஸ் ஷஃபிக் கார்த்திகா' திரைப்படம் . புதுமுக இயக்குனர் சத்திய மூர்த்தி இயக்கும் இப்படத்தில் 'இனிது இனிது' ஷரண், நாராயண், விமல் மற்றும் ஜெய் குஹைனி நடித்துள்ளனர். 'வேட்டையாடு விளையாடு' 'அமுதன் இளமாறன்' போல் கிரைம் த்ரில்லர் படமான CSKவில் நாராயண், விமல் வில்லன் இரட்டையார்களாக நடித்து கலக்கியுள்ளனர். 'இனிது இனிது' திரைப்படத்திற்கு பிறகு இணையும் இருவரும் தங்களது அனுபவங்களை கூறினர்.


'CSK - சார்லஸ் ஷஃபிக் கார்த்திகா' படத்தில் நடித்தது மிக உற்சாகமான அனுபவம். நான் சஞ்சய் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளேன். ஒரு சந்தர்ப்பத்தால் ஏற்படும் பரபரப்பில் விமலுடன் இணைந்து தவறான பாதையில் இறங்குகிறேன். இருவரும் இணைந்து வரும் காட்சிகள் விறுவிறுப்புடன் நகர்ந்து செல்லும். 'டிக் டிக் டிக்', 'நூறாவது நாள்' படங்களை போல் முழு நீள த்ரில்லர் படம். மீண்டும் 'இனிது இனிது' நண்பர்களுடன் இணைந்து நடித்ததில் மிக இனிதாய் இருந்தது.” என உற்சாகம் பொங்கக் கூறினார் நாராயண்.


“விமல் ஆதித்யா இப்படத்தில் வரும் தனது கதாப்பாத்திரத்தை பற்றிக் கூறும்பொழுது “ சந்துரு என்ற எனது கதாபாத்திரம் ஒரு வஞ்சகம் நிறைந்த இளைஞன். இக்கட்டான சூழ்நிலையில் நானும் நாராயண் இருவரும் மூளையும் உடம்புமாக இணைந்து செயல்பட்டுள்ளோம். நான் மூளையாக இருந்து தீட்டும் திட்டங்களை நாராயண் செயல்படுத்துவார். இயக்குனர் சத்தியா எனக்கு முழு சுதந்திரம் அளித்தார். படம் பார்த்த நண்பர்கள் இரண்டு மணி நேரம் எப்படி படம் மின்னல் வேகத்தில் செல்கிறது என்றுக் கூறினார்கள். இரண்டாவது படத்திலேயே எனது நடிப்பை வெளிபடுத்தும் விதமாக வில்லத்தனமான கதாபாத்திரம் கிடைத்திருப்பது எனது நடிப்பிற்கு கிடைத்த அங்கீகாரமாய் எண்ணுகிறேன்.” எனக் கூறினார் விமல் ஆதித்யா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in